'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச
ஒட்டி வந்த அப்பம் 19 மார்ச் 2017 காலை ஞாயிறு ஆராதனை, வேலூர் காந்திநகர் ஆலயத்தில் மனைவி மற்றும் எனது மூன்றரை வயது மகளுடன் பங்கேற்றேன். ஆராதனை நேரத்தில் மகள் அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். திருவிருந்து வேளை வந்தது, மகளது தொந்தரவினால் மனைவி திருவிருந்தில் பங்கேற்காத நிலையில் காணப்பட்டாள். நான் எழுந்து சென்று திருவிருந்திற்காக முழங்கால் படியிட்டேன். போதகர் எனக்கு அப்பம் கொடுக்க முயற்சித்தபோது, அவரது கரத்தில் இரண்டு அப்பங்கள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு வந்தன. அந்த இரண்டு அப்பங்களையும் தனித்தனியாகப் பிரித்து ஒன்றை மட்டும் எனது கரத்தில் கொடுக்க போதகர் முயற்சித்தார், என்றபோதிலும் போதகரால் இயலாமல் போகவே, இரண்டு அப்பங்களையும் எனது கரத்தில் கொடுத்து விட்டுச் சென்றார். பந்தியிலிருந்து நான் எழுந்து மனைவி அருகில் வந்ததும் இரண்டு கிடைத்ததற்கான ரகசியம் புரிந்தது; தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்ற வசனம் விளங்கியது.